சாக்கடையில் கலக்கும் குடிநீர்

ஆட்டையாம்பட்டி, அக்.21: பூலாம்பட்டியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், ராசிபுரம் வரை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராசிபுரம் செல்லும் பிரதான குடிநீர் குழாய் அமைத்து பல ஆண்டுகள் ஆவதால், ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் சரி செய்தும் பல இடங்களில் குழாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்றைய முன்தினம் இரவு, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே, ராசிபுரம் பிரதான குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாக அருகில் உள்ள சாக்கடையில் செல்கிறது. விவசாயத்திற்கு எடுக்கப்படும் தண்ணீரின் அளவை போல், குழாயில் இருந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது.  எனவே, உடைந்த குழாயை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>