அண்ணா பல்கலை கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.21: அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதைக் கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாக பிரிக்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் மற்றும் இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபடுவதை கண்டிப்பதுடன் சட்ட விரோதமாக செயல்படும் துணைவேந்தர்சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வேண்டும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், பழனிவேல், சேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: