ராகுல்காந்தி கைது கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆரணியில் 13 பேர் மீது வழக்கு

ஆரணி, அக்.2: உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ஆரணி காந்தி சாலை அருகே நேற்று காங்கிரஸ் நகர தலைவர் ஜெயவேல், மாவட்ட துணைத்தலைவர் அருணகிரி ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சேகர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 13 பேர் மீது ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Related Stories: