வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்பு கண்டித்து

செங்கம், ஏப். 30: கழிவுநீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு அமைத்ததை கண்டித்து வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சி காமராஜ் நகரில் கழிவு நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று பொது மக்கள் செங்கம் குப்பநத்தம் சாலையில் வாகனங்களை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சாலையில் அமர்ந்து வாகனங்களை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஓடையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி மழைக் காலங்களில் முறையாக கழிவுநீர் செல்ல கோரிக்கை முன்வைத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சுமார் 3 நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்பு கண்டித்து appeared first on Dinakaran.

Related Stories: