விதிமுறையை பின்பற்றாத தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல்

ஊட்டி, அக். 1: ஊட்டியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறிய தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஊட்டியில்  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என அவ்வப்போது தாசில்தார் குப்புராஜ் தலைமையில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள  தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது முக கவசம் அணியாமலும், தனிமனித  இடைவெளியை பின்பற்றாமலும் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. இதேபோல் குன்னூர் அருகே கரும்பாலம் பகுதியில்  கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தவறிய இரு தொழிற்சாலைகளுக்கு  குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.  அரசு பஸ்சில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க தவறிய நடத்துனருக்கு ரூ.500  அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: