மானியம் குறித்து தகவல் கேட்டதால் எரிந்து விழுந்த கூட்டுறவு தொழிற்சாலை ஊழியர் மீது தனிப்பிரிவில் விவசாயி மனு

 

கூடலூர், மே 5: தமிழக அரசின் தேயிலை விவசாய மானியம் குறித்து தகவல் கேட்ட விவசாயிடம் முதல்வரிடம் கேட்கக்கூறிய கூட்டுறவு தொழிற்சாலை ஊழியர் குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு விவசாயி புகார் மனு அனுப்பினார். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த இரண்டாவது மைல் பகுதியில் இயங்கி வருகிறது கூட்டு சாலிஸ்பரி கூட்டுறவு தேவை தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் நாடு காணி பகுதியியை சேர்ந்த சிறு விவசாயி சண்முகம் என்பவர் உறுப்பினராக உள்ளார்.

இவர் கடந்த மாதம் 11ம் தேதி தொழிற்சாலைக்கு வழங்கிய பசுந்தேயிலைக்கு முன்பணம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஊழியரிடம், தமிழக அரசு சிறு தேயிலை விவசாயிகளுக்கு அறிவித்த மானியம் எப்போது எங்களுக்கு கிடைக்கும் என கேட்டுள்ளார். இதற்கு அந்த ஊழியர் இது குறித்து முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இவரது பதிலால் வேதனை அடைந்த விவசாயி இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அம்மனுவில், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மானியம் குறித்து தகவல் கேட்டதால் எரிந்து விழுந்த கூட்டுறவு தொழிற்சாலை ஊழியர் மீது தனிப்பிரிவில் விவசாயி மனு appeared first on Dinakaran.

Related Stories: