முக்குருத்தி, ஓவேலியில் 267 வரையாடுகள்

 

ஊட்டி,மே7: நீலகிரியில் நடந்த ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணியின் போது 267 வரையாடுகள் உள்ளது தெரிய வந்துள்ளது. நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் ஓவேலி வனச்சரக பகுதிகளில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 29ம் தேதி துவங்கி இம்மாதம் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதில், வனப்பணியாளர்கள், நீலகிரி வரையாடுத் திட்ட மூத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பக புலிகள் வன சிறப்பு இலக்குப்படை பணியாளர்கள் உள்ளடக்கிய குழுவினர் சுமார் 25 நபர்கள் குழுக்களாக பிரிந்து முக்குருத்தி தேசிய பூங்காவில் இரட்டை பார்வையாளர்கள் முறையில் 5 பிளாக்குகளில் மொத்தம் 10 குழுக்களாக சென்று வரையாடு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவைகளின் வாழ்விடங்களான மலை முகடுகள்,புல்வெளி மலைகள் மற்றும் நீர் நிலைகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர ஆடுகளின் எச்சம் உள்ளிட்ட முறைகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் போது முக்குருத்தி தேசிய பூங்கா பகுதிகளில் 251 வரை ஆடுகளை நேரில் கண்டதாகவும், ஓவேலியில் வனப்பகுதியில் 16 வரையாடுகள் தென்பட்டதாகவும் தெரிவித்தனர். நீலகிரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வரையாடுகளின் இந்த கணக்கெடுப்பின்போது மொத்தம் 267 வரையாடுகள் தென்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post முக்குருத்தி, ஓவேலியில் 267 வரையாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: