ரேஷன் கடைக்குள் புகுந்த மழைநீர் வீணாகும் உணவுப்பொருட்கள்

பரமக்குடி, அக்.1:  பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் செயல்படும் ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுந்ததால், பொருட்கள் வீணாகும் நிலை உள்ளது. பரமக்குடியில் ரேஷன் கடை எண் 4 மற்றும் 5 வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. வீட்டின் உரிமையாளர்கள் ரேஷன் கடையை காலி செய்ய வலியுறுத்தியதால் தற்காலிகமாக உழவர் சந்தை பகுதியில் உள்ள வணிக வளாக கடைகளுக்கு மாற்றப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  கட்டிடங்கள் என்பதால், முற்றிலும் சேதமடைத்துள்ளது.

இதனால் உணவு பொருட்களை எலிகள் வீணாகிக்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால், ரேஷன் கடைக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் உணவுப் பொருள்கள் நீரில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு போதுமான உணவு பொருட்களை வழங்க முடியாத நிலை உள்ளது. ரேஷன் பொருள்கள் வீணாவதை தடுக்கும் வகையில், ரேசன் கடைக்கு மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: