கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை

பொள்ளாச்சி, செப்.30:  கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் முன்னிலை வகித்தார், தாசில்தார் தணிகைவேல் மற்றும் அரசு டாக்டர்கள், சுகாதாரத்துறை குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இருப்பினும், அப்பணியை மேலும் துரிதப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  நகராட்சிக்குட்ட வார்டுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான, சுகாதார பணிமேற்கொள்ள ஏற்கனவே தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை இன்னும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழுவினர், வார்டு வாரியாக நேடியாக சென்று சளி மாதிரி எடுப்பதுடன், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குறித்து கண்காணிப்பார்கள். அவ்வப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக என்னென்ன நடவக்கை எடுக்கலாம்? என ஆலோசனை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Related Stories: