திரவ இரிடியம் என பறிமுதல் செய்யப்பட்ட பொருள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடி, செப்.29: தூத்துக்குடியில் திரவ இரிடியம் என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள் பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ராஜபாளையத்தை சேர்ந்த  மரியதாஸ்(49). இவரது நண்பர் கதிர்வேல்நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன்(47) ஆகியோர் உதவியுடன், சிவகங்கை மாவட்டம் கண்டனூரை சேர்ந்த முதியவர் வைத்தியலிங்கம்(60), முதுகுளத்தூர் புளியங்குடியை சேர்ந்த அமமுக ஒன்றிய செயலாளர் கருப்பணன் மகன் முத்துராமலிங்கம்(45) ஆகியோர் திரவ இரிடியம் என்று கூறி ஒரு பொருளை விற்க முயன்றுள்ளனர்.

இது குறித்து தங்கம் என்பவர் அளித்த புகார் மூலம் அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து சென்று மரியதாஸ், முருகன், வைத்தியலிங்கம், முத்துராமலிங்கம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.   அவர்களிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட திரவநிலையில் உள்ள இரிடியம் என்று தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை  சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வின் முடிவில் தான் கைப்பற்றப்பட்ட திரவ பொருள் என்ன என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: