வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து போராட்டம்

ஈரோடு, செப்.25: மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி நகல்களை கிழித்தும், பாடை கட்டியும் ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.கருங்கல்பாளையம் காந்திசிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது லக்மானுல் ஹக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பர்ஹான் அகமது, மாவட்ட தலைவர் அப்துல்ரகுமான், மாநில பொருளாளர் ஹசன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்ட மசோதாவை கண்டித்தும், உடனடியாக திரும்ப பெறக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகல்களை கிழித்தும், பாடை கட்டி எடுத்து வந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மக்கள் சிவில் உரிமைக்கழகம் மாநில தலைவர் கண.குறிஞ்சி, நீரோடை தலைவர் நிலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>