வடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு

தொட்டியம், மார்ச் 20: தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கவரப்பட்டியில் வசித்து வருபவர் முட்டை வியாபாரி பொன்னுசாமி. இவர் வியாபாரத்திற்காக சென்ற நிலையில், அவரது மனைவி தோட்டத்திற்கு சென்றுள்ளார். 9ம் வகுப்பு படிக்கும் அவரது பெண் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 11 மணி அளவில் வீட்டிற்கு உறவினர் போல் வந்த நபர் மாவிலை வேண்டும் என கேட்டுள்ளார்.

Advertising
Advertising

அந்த பெண் வீட்டின் பின்புறம் மாவிலை பறிக்க சென்றபோது அந்த மர்ம நபர் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பணம் ரூ.1 லட்சம், 4 பவுன் செயின் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளார். மாவிலை ஒடித்து வந்த பொன்னுசாமியின் மகள் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து பொன்னுசாமி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் உறவினர் போல் வந்து பீரோவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: