கொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து

பரமத்திவேலூர்,  மார்ச் 20: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நன்செய்  இடையாறு மாரியம்மன் கோயிலில் நடைபெற இருந்த தீமிதி விழா ரத்து  செய்யப்படுகிறது என கோயில்  நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 9ம் தேதி கம்பம்   நடுதலுடன் தொடங்கியது.  கோயிலில் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நடைபெற இருந்த நிலையில்,  விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

இந்நிலையில், கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவுபடி நோய் தடுப்பு மற்றும்  சுகாதார காரணங்களால், மக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடுவதால் ஏற்படும்  பாதிப்புகளை தடுப்பதற்காக, தீமிதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் கோயிலுக்கு  வருவதை தவிர்க்குமாறும், அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்  கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Stories: