மணமேல்குடியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

அறந்தாங்கி, மார்ச்19: மணமேல்குடியில் ரூ. 18 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. மணமேல்குடி பகுதிகளான அண்ணாநகர் ,குலச்சிறையார் நகர் ,காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் பற்றாக்குறையை போக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மணமேல்குடி ஒன்றியக் குழு தலைவர் பரணி கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்திருந்தனர் . பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற ஒன்றியக்குழுத் தலைவர் பரணி கார்த்திகேயன் மணமேல்குடி ஊராட்சி மன்ற நிதியிலிருந்து மஞ்சள் குளம் பகுதியில் சுமார் 18லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்தார். .இந்த நிதியில் இருந்து ஆழ் துளை கிணறு அமைக்கும் பணியை மணமேல்குடி ஒன்றியகுழுத்தலைவர் பரணிகார்த்திகேயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார் .நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனியார் என்ற முகமது அப்துல்லா, ஒன்றிய ஆணையர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக் கவுன்சிலருமான சக்திராமசாமி ,வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணராஜா ,மற்றும் அனைத்து ஒன்றியகுழு உறுப்பினர்கள் , முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: