புதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை, மார்ச் 19:   தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வடநத்தம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வடநத்தம்பட்டி கிராமத்திலுள்ள ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல், பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைப்பதற்காக, பயன்பாட்டில் இருந்த நிழற்குடையை அகற்றிவிட்டனர். ஆனால், இன்னும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. புதிய ரேஷன் கடை கட்டிடத்தையும், புதிய நிழற்குடையையும் விரைவாக அமைத்து தர அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு புதிய நிழற்குடை மற்றும் ரேஷன் கடை கட்டிடம் ஆகியவற்றை அமைத்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், மனுதாரர் கோரும் நிவாரணம் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடையது. எனவே, அவர்களிடம் முறையிட்டு உரிய நிவாரணம் ெபறலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: