அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால் வீடு நோக்கி சென்ற சத்துணவு

மதுரை, மார்ச் 19: மதுரையில் அங்கன்வாடி மையம் மூடப்பட்டதால், சத்துணவு பொருட்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால், கடந்த 17ம் தேதியிருந்து குழந்தைகள் அங்கன்வாடிக்கு வரவில்லை. இதனால், குழந்தைகளுகாக வழங்கப்பட்ட, உணவு பண்டங்களை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று வழங்குமாறு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, இணை உணவு உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு வழங்க வேண்டும் என ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி பிரித்து, அவற்றை குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சத்துணவு பணியாளர்கள் நேற்று முதல் வழங்கி வருகிறார்கள்.

மார்ச் 31 வரையிலான சத்துணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 1 முதல் மீண்டும் அங்கன்வாடிக்கு அனுப்பி வைக்குமாறு குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஊழியர்கள் அறிவுறுத்தி உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். எத்தனை குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறித்து பதிவேடுகளில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: