நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

உத்திரமேரூர் அருகே காவாந்தண்டலத்தில்

காஞ்சிபுரம், மார்ச் 18: காவாந்தண்டலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என விவசாய உற்பத்தியாளர் குழு சார்பில் தலைவர் சிவசங்கரன், செயலாளர் முருகன், பொருளாளர் மணி ஆகியோர்கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதா வது காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே காவாந்தண்டலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் நெல் மகசூல் செய்துள்ளோம். தற்போது விளைச்சல் அறுவடை நிலையில் உள்ளது. ஆனால், அரசின் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், தனியாரிடம் நெல் விற்பனை செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. கடும் சிரமப்பட்டு விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அடுத்த போகம் பயிர் செய்யக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, எங்கள் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: