விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சிறுமலையில் காய்கறி மார்க்கெட் துவக்கம் நிரந்தரமாக இடம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

திண்டுக்கல், மார்ச் 18: சிறுமலைப்பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், தற்காலிக மார்க்கெட் துவங்கி விவசாயிகள் காய்கறி விற்பனையை துவக்கி உள்ளனர். தங்களுக்கு நிரந்தர மார்க்கெட் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் பலா, வாழை, எலுமிச்சை, காப்பி, ஆரஞ்சு, மிளகு, அவக்கோடா உள்ளிட்ட பொருள்கள் விளைகின்றன.

Advertising
Advertising

மேலும், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சவ்சவ், அவரை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். விளைச்சல் அமோகமாக இருக்கும்போது, ஆயிரக்கணக்கான மூட்டைகளில் காய்கறிகளை, திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

Related Stories: