காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம்

காடையாம்பட்டி, மார்ச் 18: காடையாம்பட்டி ஒன்றியத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தடையை மீறி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளது. தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பு நடடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழக அரசும், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை  தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகங்களிலோ மற்றும் தனியார் நிறுவனங்களிலோ கூட்டம் நடத்தக் கூடாது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை மீறி காடையாம்பட்டி ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி குடிநீர் விநியோகிப்பாளர்கள் ஆகியோரை கொண்டு நேற்று கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீரில் குளோரினேஷன் ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூர் போர்வெல் தண்ணீரையும் குளோரினேஷன் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.   

அதிகாரிகள் தரப்பில் கூட்டம் நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு உத்தரவை அரசு அதிகாரிகளே மீறி செயல்படுகின்றனர். அரசு உத்தரவை மீறி கூட்டம் நடத்திய அதிகாரிகள் மீது சேலம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: