ஜவுளி பூங்கா அமைக்க ரூ.2.50 கோடி

சிவகங்கை, மார்ச் 13:  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக முதலீட்டாளர்கள் மற்றும் ஜவுளித்தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: ஜவுளித்தொழில் என்பது பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிலையான தொழிற்கூடமாகும். ஜவுளித் தொழிற்கூடங்களை நவீன தொழில் நுட்பத்துடன் செயல்படுத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மானிய திட்டத்தில் வழங்கி வருகின்றன.சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த ஜவுளி ப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2.50 கோடி வரை நிதியுதவி அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2 ஏக்கர் நிலம் இருந்தால் போதும். மூன்று நபர்கள் கொண்ட அமைப்பு பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

சிவகங்கை மாவட்டம் தொழில் மையங்களை உருவாக்க ஏதுவான மாவட்டமாகும். தொழில் துவங்குவதற்கு தேவையான பயிற்சி மற்றும் வங்கிக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் உறுதுணையாக உள்ளது. படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் கல்வி திறமைக்கேற்ப சிறிய அளவிலான தொழில் துவங்குவதற்கு தேவையான வழிகாட்டுதலை அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ராகவன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், கைத்தறி துறை கண்காணிப்பு அலுவலர்கள் பாண்டி, ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: