வேளாண் பொறியியல் துறை சார்பில் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே இலவச கைதெளிப்பான் வழங்கல்

கொள்ளிடம், மார்ச்11: வேளாண் பொறியியல் துறை சார்பில் பாரபட்சமாகவும், மறைமுகமாகவும் கைதெளிப்பான் வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சில விவசாயிகளுக்கு மட்டும் மறைமுகமாகவும், பாரபட்சமாகவும் ரகசியமாகவும் கொள்ளிடம் பகுதியில் உள்ள சில விவசாயிகளுக்கு மட்டும் வேளாண் பொறியியல் துறை சார்பில் இலவசமாக கைதெளிப்பான் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் ஆளும் அரசியல் கட்சி சார்பில், பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பாரபட்சமாகவும், மறைமுகமாகவும் வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்படும் இலவச கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு டீசல் இஞ்சின் மின்மோட்டார் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் பகிரங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, பின்னர் விவசாயிகளின் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, உரிய ஆய்வுக்கு பிறகு பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் தராமல் வேளாண் பொறியியல் துறை அரசியலாக மாறி வருவது வருந்தக் கூடியதாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே ஒரு தலை பட்சமாக ஒரே கட்சியை சேர்ந்தவர்களுக்கு வேளாண் பொறியியல் துறை மறைமுகமாக கைத்தெளிப்பான் வழங்கியதற்கு கொள்ளிடம் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

Related Stories: