பைப் லைன் பதிக்க இடம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தர கோரிக்கை

தரங்கம்பாடி, மே 9: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு, ஈச்சங்குடி விவசாயிகள் நலச்சங்க தலைவர் துரைராஜன் அனுப்பியுள்ள மனுவில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் கார்குடி, வேளாண்புதுக்குடி, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, நரசிங்கநத்தம், மே மாத்தூர் வழியாக நரிமணத்தில் இருந்து சீர்காழி அருகே உள்ள மாதானம் கிராமத்திற்கு ஓஎன்ஜிசி பைப் லைன் அமைக்க விவசாயிகள் நிலம் வழங்கினர். இதற்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஓஎன்ஜிசி நிர்வாகம் இழப்பீடு தொகை வழங்கியது. இரண்டாம் தவணை இழப்புதொகை மார்ச் 31க்குள் வழங்கப்படும் என்று அறிவித்துதம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே இரண்டாம் தவணை இழப்புத்தொகையை பெற்றத்தர வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பைப் லைன் பதிக்க இடம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: