மயிலாடுதுறையில் 226 பள்ளி வாகனங்கள் தணிக்கை: கலெக்டர் தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை, மே 12: மயிலாடுதுறையில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் தணிக்கை கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி வாகனங்களில் கூண்டு அமைப்பு, ஏறும் மற்றும் இறங்கும் வழி, ஓட்டுநர் இருக்கை அறை, தளப் பகுதி, ஜன்னல்கள் முதலுதவி பெட்டி மற்றும் அதில் பராமரிக்கப்படும் மருந்துகள், தீ தடுப்பான், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவி (50கி.மீ/மணிக்கு), வாகனத்தில் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, ஜிபிஆர்எஸ், வாகனத்தின் வெளிப்புறம் முன் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும் அதை கண்காணிக்க ஓட்டுநர் இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே மானிட்டர், வாகனத்தின் அனுமதி சீட்டு, தகுதி சான்று, காப்பீடு சான்று, ஓட்டுநர் உரிமம், உதவியாளர் மற்றும் புகை சான்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் உள்ள 76 பள்ளிகளில் இருந்து வந்திருந்த 396 வாகனங்களில் 226 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் குறைகள் கண்டறியப்பட்ட 18 வாகனங்களுக்கு தகுதி சான்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது. அவைகள் ஏழு நாட்களுக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். பள்ளி கல்வி வாகன ஓட்டுனர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவ குழு மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது

The post மயிலாடுதுறையில் 226 பள்ளி வாகனங்கள் தணிக்கை: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: