சிறப்பு கிராம சபை கூட்டம்

வருசநாடு, மார்ச் 11: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்து பேசினார். ஊராட்சி செயலர் சின்னசாமி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் குணசேகரன், ஜெயபால், உத்திரன், அரசு, சின்னுக்காளை, தங்கம், தும்மக்குண்டு அங்கன்வாடி பணியாளர் லோகராணி, காந்திகிராமம் அங்கன்வாடி பணியாளர் அமராவதி, பணித்தள பொறுப்பாளர்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள், குடிநீர் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள், மின்சாரஊழியர்கள், கிராம செவிலியர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து போஜன் அபியான் என்னும் சிறப்பு கிராமசபை திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு திட்டங்கள் பற்றியும் சுகாதாரம் பற்றியும் கழிப்பறை கட்டுவது பயன்படுத்துவது பற்றியும் மிகவும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர்இளம் பெண்கள் வளர்ச்சிகள் பற்றியும், கிராமங்களை தூய்மையாக்குவது உள்ளிட்ட கருத்துக்களும் பொது மக்களுக்கு விளக்கப்பட்டு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: