மூணாறில் கனமழைக்கு வாய்ப்பு அபாய பகுதி கடைகளை அகற்ற ஊராட்சி நோட்டீஸ்

மூணாறு, மே 22: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி எடுத்து வருகின்றன. பிரபல சுற்றுலா தலமான மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக ஆபத்தான பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர கடைகளை வரும் 23ம் தேதிக்குள் தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்று மூணாறு ஊராட்சி கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளர் சனல் குமார் கூறுகையில், “மூணாறில் முன் வருடங்களில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொண்டு, மரம் மற்றும் மண் சரிவு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர கடைகளை தற்காலிகமாக நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. மொத்தம் 46 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள கால அளவில் கடையை அகற்றாவிட்டால் ஊராட்சி காவலர்களின் உதவியுடன் கடைகள் அகற்றப்படும்’’ என்றார்.

The post மூணாறில் கனமழைக்கு வாய்ப்பு அபாய பகுதி கடைகளை அகற்ற ஊராட்சி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: