கரூர், மார்ச் 6: கரூர் கோவை சாலை சக்திநகர் பகுதியில் குப்பைமேடு அகற்றாததால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. கரூர் கோவை சாலை சக்திநகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகள் தொடர்ந்து அகற்றப்படாததால் மேடாகி குவிந்து விட்டது. இதுமக்கிப்போய் காணப்படுகிறது. குப்பைமேடு காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
