முசிறி எம்ஐடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

முசிறி, பிப்.3: முசிறி எம்ஐடி கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் இளங்கோ தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரவீன்குமார் சிறப்புரையாற்றி சிறந்த அரங்குகளை அமைத்திருந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கல்லூரி செயலாளர் ஆதித்யா நட்ராஜ், அகடமிக் டீன் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் முதல்வர் கனிஎழில் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஹரிஷ் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: