கோயிலை இடித்து பட்டா பெற்றவர் மீது நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு

விருதுநகர், மார்ச் 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சின்னதாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து கூறுகையில், சின்னதாதம்பட்டி கிராமத்தில் உள்ள எல்லையம்மாளை சின்னதாதம்பட்டி, பெரிய தாதம்பட்டி, வாழ்வந்தாள்புரம் ஆகிய 3 கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குல தெய்வமாக வழிபட்டு வருகிறோம். கடந்த 3 தலைமுறைக்கும் மேலாக வணங்கி வரும் எல்லையம்மனுக்கு நீர்வழிப்புறம் போக்கில் கோவில் எழுப்பட்டு இருந்தது. இந்நிலையில் சின்னதாதம்பட்டி கிராம முன்னாள் ஊராட்சி தலைவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோயிலை இடித்து தரைமட்டமாக தள்ளி விட்டார். இது தொடர்பாக கேட்டதற்கு, தனது பெயரில் பட்டா இருப்பதாக கூறுகிறார். கோயில் இடத்தை தனது பட்டா மாற்றியது தவறு. மாவட்ட நிர்வாகம் கோயிலை இடித்து தரைமட்டமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுத்து, தவறாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை

எழுப்பினர்.

Related Stories: