(தி.மலை) இயற்கை பாதுகாப்பு வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் வந்தவாசியில்

வந்தவாசி, மார்ச் 3: வந்தவாசியில் இயற்கை பாதுகாப்பு, பசுமை புரட்சியை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடந்தது. வந்தவாசி கோ.கிரீன் அமைப்பு சார்பில் இயற்கை பாதுகாப்பு மற்றும் பசுமை புரட்சியை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 3 பிரிவுகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

தேரடியில் புறப்பட்ட மாரத்தான் ஓட்டத்தை டிஎஸ்பி பி.தங்கராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் இளைஞர்கள் சுமார் 10 கி.மீ. தூரமும், பெண்கள் 3 கி.மீ. தூரமும், சிறுவர்கள் 1.5 கி.மீ. தூரமும் ஓடினர். இதில், கலந்து கொண்டு ஓடியவர்களுக்கு வழியில் குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மருத்துவர் ெஜயமணி ஆறுமுகம், மாம்பட்டு கோயில் உபாசகர் ஆ.லட்சுமணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோ.கிரீன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னாவரம் சுரேஷ், வி.கோபி, பி.பிரேம், பிரபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: