கமுதி பகுதியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தீவிரம்

கமுதி, மார்ச் 1:  கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொருளாதார கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த முக்கியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான விவரங்களை திரட்டும் நோக்கில் நாடு முழுவதும் 7வது பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதனை கடந்த வருடம் அக். மாதம் 9ம் தேதி சென்னையில் தமிழக கவர்னர் பண் வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இப்பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பின் போது திரட்டப்படும் தனிநபர்கள் நிறுவனங்களின் ரகசியம் காக்கப்படும். எனவே பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை கணக்கெடுப்பாளர்கள் அணுகி விவரங்களை கேட்கும் போது பொதுமக்கள் எந்த வித அச்சமோ, தயக்கமோ இன்றி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஒருங்கிணைப்பாளர்துரைராஜு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கணக்கெடுப்பின் மூலம் நிறுவனத்தின் இருப்பிடம், மூலதனம், பணியாட்கள், முதலீடு, ஆண்டு வருமானம், நிரந்தர கணக்கு எண், சரக்கு மற்றும் சேவை வரி நிறுவனத்தின் கிளைகளின் எண்ணிக்கை போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று மேற்பார்வையாளர் கதிர்வேல் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: