வேளாண் அதிகாரிகள் ஆய்வு

வருசநாடு, பிப். 28: கடமலை மயிலை ஒன்றியத்தில் துவரை சாகுபடியில் விளைச்சல், பூச்சி தாக்குதல் ஆகியவை குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், அண்ணாநகர், ஆத்தங்கரைபட்டி, அய்யனார்புரம், பாலூத்து, தங்கம்மாள்புரம், வருசநாடு, தும்மக்குண்டு ஆகிய ஊர்களில் விளைநிலங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், துவரையின் விளைச்சல் குறித்து கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் எவ்வாறு உள்ளது; விவசாயிகளுக்கு ஏற்றதாக உள்ளதா அல்லது விளைச்சல் குறைவாக உள்ளதா என விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.மேலும், துவரை சாகுபடியில் பூச்சி தாக்குதல் உள்ளதா என்பது உள்ளிட்ட பல தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயிவின்போது, கடமலைக்குண்டு வேளாண்மைத்தறை அலுவலர் முருகன், உதவி அலுவலர்கள் முனீஸ்வரன், பவுன் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: