திருவரங்குளத்தில் மழைவேண்டி காமன் பண்டிகை

புதுக்கோட்டை, பிப்.28: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் மழை வேண்டி விவசாயிகள் காமன் பண்டிகை நடத்தினர். திருவிழாவின் துவக்கமாக காமன் பண்டிகை விழா நடைபெற்றது. தீர்த்தக் குளமான நைனாரி குளத்தில் நகரிலிருந்து ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்து சேவல் அறுத்து ரசம் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாணவேடிக்கை மேளதாளத்துடன் காமன் மரத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து தெற்கு ரத வீதியில் உள்ள அம்மன் சன்னதி அருகில் காமன் மரத்தை எழுந்தருளச் செய்து அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பதினாறாம் நாள் இரவில் இளைஞர்களுக்கு ரதிமன்மதன் வேடமணிந்து தேரோடும் நான்கு வீதிகளின் அவர்களை சண்டையிடச் செய்து ஊர்வலமாக அழைத்து வந்து காமன் மரம் எரிக்கப்படும்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை திருவரங்குளம் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

பயணிகள், பொதுமக்கள் கோரிக்கைகார்கள் நிறுத்தவும் இடம் வேண்டும்இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மக்கள் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்லவும், திருச்சி விமான நிலையத்திற்கு செல்லவும் ஆம்னி பேருந்து பயணத்தை அதிகம் தேர்வு செய்கின்றனர். இந்த பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை நகருக்கு வந்து செல்கின்றன. மேலும் புதுக்கோட்டையில் இருந்தும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கு என தனியே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்திற்கு உறவினர்களை விட வருவோர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆகையால் ஊராட்சி அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் நிறுத்த இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Related Stories: