கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

ஈரோடு, பிப்.27:  ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று துவங்கியது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு ஏப்ரல் 5ம் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏப்ரல் 10ம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 12ம் தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக 40 நாட்கள் உபவாசம் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி, நேற்று முதல் தவக்காலம் துவங்கியதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆர்.சி, சிஎஸ்ஐ உள்ளிட்ட தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: