குன்னூர் ராணுவ பள்ளியில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூர்,பிப்.26: குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் அண்மை காலமாக வனவிலங்குகள், நடமாட்டம்  அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரடி காட்டுமாடு, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா  வருகிறது.இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு  உட்பட்ட ஆர்மி பள்ளி வளாகத்திற்குள் நேற்று அதிகாலை சிறுத்தை புகுந்தது.  பின் அங்கும் இங்குமாக உலாவி கொண்டு இருந்துள்ளது. சிறுத்தை புகுந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது

இது தொடர்பாக வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் ராணுவ அதிகாரி கர்னல் சன்னி குரியன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.மேலும் கால் தடத்தை வைத்து எந்தெந்த பகுதிகளுக்கு சென்றுள்ளது? என கண்டறிந்தனர்.  பொதுமக்கள் நாயுடன் நடைபயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: