பெரம்பலூர் அருகே வக்கீல் மர்மச்சாவு போலீசாரை கண்டித்து வி.சி கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு

பெரம்பலூர், பிப்.26:பெரம்பலூர் துறைமங்கலத்தில், காவல் துறையினரைக் கண்டித்து விடுதலை சிறு த்தைகள் கட்சியினர் நேற்றிரவு சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பிரகாசம்(30). வழக்கறிஞர். கோவை மாவட்டம், நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரேவதி(26) இவர்கள் இருவருக்கும், கடந்த 5 ஆ ண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன்- மனைவிக்கிடை யே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக ரேவதி தனது பெற்றோருடன் வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மனைவி வீட்டுக்குச் சென்ற பிரகாசம் மர்ம மான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோ தரி சசிகலா, தனது சகோதரனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, கோவை மாவட்டம், பொத்தனூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதி ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கோயம் புத்தூரைச் சேர்ந்த அடை யாளம் தெரியாத சிலர் சசிக்கலா வீட்டுக்கு வந்து, வழக்கை திரும்பப் பெறக்கோ ரி மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்ப லூர் காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்ததாக தெரிகிறது.

ஆனால், பெரம்பலூர் போலீஸார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில் லையாம். மேலும் புகாரை திரும்பப்பெற போலீசாரே வலியுறுத்தியதாக கூறப்ப டுகிறது. இதனால் ஆத்திர மடைந்த சசிகலா உறவின ர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் நகர காவல் துறையினரை கண்டித்தும், மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தியும், திருச்சி- சென் னை தேசியநெடுஞ்சாலை யில் துறைமங்கலம் பகுதி யில் நேற்றிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர் ந்து சாலை மறியல் போரா ட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: