28ம் தேதி நடக்கிறது ராஜேந்திரபுரம் நைனாமுகமது கல்லூரி பட்டமளிப்பு விழா

அறந்தாங்கி, பிப்.26: அறந்தாங்கியை அடுத்து ராஜேந்திரபுரம் நைனா முகம்மது கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் முகம்மது பாரூக் தலைமை தாங்கினார். பட்டமளிப்பு விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.நைனாமுகம்மது, கா.நைனாமுகம்மது முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மணிசங்கர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றி 225 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.பாரதிதாசன் பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் 13வது இடம்பெற்ற இளங்கலை இயற்பியல் துறை மாணவி சிவலட்சுமிக்கு ரொக்கம் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக அளவில் தனிச்சிறப்பிடம் பெற்ற பட்டம் பெற்று இளநிலை ஆங்கிலத்துறையில் கீர்த்தனா, கணிதத்துறையில் பர்கானா, கணினி அறிவியல் துறையில் ஷப்ரின்பேகம், கணினி பயன்பாட்டியியல் பிரியதர்ஷினி, வணிக மேலாண்மையியல் துறையில் ரோஜிமா மற்றும் முதுநிலை பட்டத்தில் ஆங்கிலத்துறையில் ரமா, கணினி அறிவியல் துறையில் பவித்ரா மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது. நைனா முகம்மது கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்ஸி ஜே மனோகரம், கிரசென்ட் மெட்ரிப் பள்ளி முதல்வர் நாராயணசாமி, ராஜேந்திரபுரம் ஊராட்சிமன்ற தலைவர் இந்திரா முத்துராமன், அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் ஊர்பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கல்லூரி முதல்வர் ராபர்ட் அலெக்சாண்டர் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் கணினித்தலைவர் ஈஸ்வரி நன்றி கூறினார். கணினித்துறை பேராசிரியை கிரேஸ் அற்புதா ராஜகுமாரி மற்றும் தமிழ்த்துறை பேராசிரியைர் சுதா நிகழ்ச்சியனை தொகுத்து வழங்கினர்.

Related Stories: