கமுதி புனித அந்தோணியார் ஆலயத்தில் திருநீற்று புதன் வழிபாடு

கமுதி, பிப். 26:கமுதி ெமயின் பஜாரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இது நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த ஆலயத்தில், தவசு கால வழிபாடு இன்று துவங்குகிறது. இதனை திருநீற்று புதன் வழிபாடு என்று அழைப்பர்.கிறிஸ்தவர்கள் அனைவரும், இன்று முதல் 40 நாட்கள் நோன்பு இருந்து வழிபாடு நடத்துவர்.7வது வார வியாழக்கிழமையை, புனித வியாழன் என்றும், ஏசு கிறிஸ்து மறித்த நாளை புனித வெள்ளியாகவும் அழைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர்.ஏசு கிறிஸ்து, உயிர்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். சிவகங்கை மறைமாவட்ட முதன்மைகுரு ஜோசப் லூர்து ராஜா இன்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார். ஏராளமான கிறிஸ்துவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: