ஜெயலலிதா பிறந்தநாள் விழா கமுதியில் சிறப்பு மருத்துவ முகாம்

கமுதி, பிப். 26:கமுதியில் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கமுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கே.என்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், பி.பி.எஸ்.மருத்துவமனை மூலம் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்னாள் பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு, இந்த முகாமை துவக்கி வைத்தார்.

டாக்டர் நிகில் சோலை தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.மாவட்ட காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, கமுதி அரசு மருத்துவமனை காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யனார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மேலும் கமுதி அருகே எருமகுளம் ஊராட்சியில், ஜெயலலிதா 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் நடப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு, மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: