புனரமைப்பு, ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் உண்ணாவிரதம்

திருச்சி, பிப்.25: புனரமைப்பு, ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் நாடு தழுவிய உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியதில் திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகாரிகள் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி திருச்சியில் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்ததது. இதில் தேசிய தொலை தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம், எம்ளாயிஸ் யூனியன் மாவட்ட தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநில துணைச்செயலாளர் காமராஜ், எம்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா, தேசிய தொலை தொடர்பு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனியப்பன், அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சகிக்குமார், சஞ்சார்நிகாம் அதிகரிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்துகொண்டனர். அனைத்து தொழிற்சங்கங்கள் அதிகாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். காலை 10 மணிக்கு மாலை 5 மணி வரை நடந்தது.

இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை புனரமைப்பு செய்வதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. 4ஜி அலைக்கற்றையை மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிப்பதாக கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பிஎஸ்என்எல் நிறுவன விரிவாக்க வளர்ச்சிக்கு வங்கிகளிலிருந்து கடன் பெறுவதற்கு இறையாண்மை சான்றிதழ் வழங்குவதாக மத்திய அரசு உறுதி கூறியது. மத்திய அரசு உடனடியாக 85,00 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிப்பதாக மத்திய அமைச்சரவை எடுத்து அறிவித்தது. ஆனால் இந்த பிரதான கோரிக்கைகளை மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. ஊழியர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. நிர்வாகம் உடனடியாக ஜனவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஜனவரி, மாதம் தோறும் முறையாக ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், விருப்ப ஓய்வில் பாதிக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெளியேறி விட்ட காரணத்தால் ஏற்பட்டுள்ள சேவை பாதிப்பு உடனடியாக சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் அனைத்து பிஸ்என்எல் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: