திருச்சியில் தொடரும் அவலம் திருச்சி கடைவீதியில் உள்ள கடைகளில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் என மிரட்டி பணம் பறிப்பு

திருச்சி, பிப். 25: திருச்சி பெரிய கடைவீதியில் பெரியகம்மாளத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் என கூறிக்கொண்டு ஒருவர் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்வதும், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அபராதம் விதிப்பேன் என கூறி மிரட்டி வந்துள்ளார். ஒரு சில கடைக்காரர்கள் இவரின் மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்துள்ளனர்.இதனை வாரம் ஒருமுறை கடைப்பிடித்து வந்த நிலையில் நேற்று மீண்டும் பெரியகம்மாள தெருவில் அதேபோல் ஒரு கடையில் சோதனை என்ற பெயரில், மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த கடைக்காரர் பணம் கேட்டு மிரட்டியவரை மடக்கிப்பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில், சிக்கியவர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கூத்தூர் ரவிச்சந்திரன்(53) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், கார் டிரைவரான ரவிச்சந்திரனுக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். இதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக தன்னை ஹெல்த் இன்ஸ்பெக்டர் என கூறி பெரியகம்மாள தெருவில் உள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகளில் சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் பறித்துள்ளார். கேரிபேக் வைத்திருப்பவர்களை மிரட்டி அபராதம் விதிப்பேன் என கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார். தொடர்ந்து பல நாட்களாக இதுபோல் மிரட்டி பணம் பறித்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.டிரைவர் கைதுமத்திய அரசு பணியாளர் தேர்வுக்குபழைய நடைமுறை தொடர வேண்டும்

அரசு மருத்துவமனை முன் கூவி, கூவி கேரி பேக்குகளில் விற்கப்படும் உணவுடிஆர்இயூவலியுறுத்தல்கண்டுகொள்ளுமா சுகாதாரத்துறை

Related Stories: