கரூர் நகராட்சி பகுதியில் கூடுதலாக மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதி

கரூர், பிப். 21: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதலாக மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி உள்ளனர். ஒருங்கிணைந்த நகராட்சியாக உள்ள கரூரில் தாந்தோணிமலை, சணப்பிரட்டி, வெங்கமேடு, வடிவேல் நகர் போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதிகளில் உள்ள பல தெருக்களில் கூடுதலாக மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பகுதி மக்கள் இரவு நேரத்தில் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும், தங்கள் பகுதியில் கூடுதலாக மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்கு இல்லாத பகுதிகளில் கூடுதலாக மின்கம்பங்கள் அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: