மண்ணச்சநல்லூர் அருகே ஜல்லிகள் பரப்பி கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு

மண்ணச்சநல்லூர், பிப்.20: மண்ணச்சநல்லூர் அருகே ஜல்லிகள் பரப்பி கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞீலீயில் இருந்து துடையூர் வரையில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 3 கி.மீ தூரம் சாலை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன் பொக்லைன் மூலமாக பழைய சாலையை பெயர்த்து எடுத்து விட்டு ரெடி மிக்சர் ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் சாலை பணியை தொடர்ந்து நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த சாலை வழியாகத்தான் பள்ளி மாணவ, மாணவிகள் திருப்பைஞீலீ அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து வரவேண்டும். இதனால் அவர்கள் ஜல்லிக்கற்களில் அந்த சாலையில் கடந்து சென்று வருவதற்கு பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது தவிர பஸ்கள், மினி வேன்கள், டூவீலர்களில் செல்லும் வாகனஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்திருந்திருந்ததாக கடந்த 5ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொண்டு சாலையை சீரமைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: