தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நட்சத்திர கலைவிழா நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது

பெரம்பலூர், பிப்.20: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் சார்பில் நட்சத்திர கலை விழா நடிகர், நடிகைகள் நாட்டியத்துடன் கோலாகலமாக துவங்கியது. பெரம்பலூரில் வெள்ளி விழா கண்ட கல்வி நிறுவனமான தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பில் நடப்பாண்டிற்கான நட்சத்திரக் கலை விழாவின் 4 நாள் கொண் டாட்டம் நேற்று (19ம்தேதி) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி நேற்று மாலை 5மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நிறுவனர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ரோ வர் கல்விநிறுவனங்களின் தாளாளர் வரதராஜன்,  ராமகிருஷ்ணா கல்வி நிறு வனங்களின் தாளாளர் சி வசுப்பிரமணியம், பெரம்ப லூர் மாவட்ட ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி இராம்குமார், முன்னாள் நகராட்சி துணைத்தலை வர் வைஸ் மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தி னராக திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு பேசியதாவது : வாழ்க்கையில் கல்லூரி வாழ்க்கை என்பது மறக்க முடியாத ஒன்றாகும். அது ஒரு முறை தான் வரும் மீண்டும் திரும்பவராது. நான் கல்லூரி காலத்தில் அவ்வளவாக படிக்கவில்லை. மாணவ-மாணவியரே உங்கள் நண்பர்களுக் கும் உறவினர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்கள், பெற்றோர்களு க்கு மரியாதை செலுத்துங் கள். கொஞ்சம் கொஞ்சம் கட்டடித்து(பங்க்) கலாட்டா செய்து கல்லூரி வாழ்க்கை யை அனுபவியுங்கள். நீங்களும் நட்சத்திரமாக மாறி ஒளிர வேண்டும். திரைத் துறையில் எனது ஃபேவ ரைட் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தான். அவர் கூட ஒருமுறையாவது நடித்து விட வேண்டும். யார்மீதும் எனக்கு கிரஷ் கிடையாது. நான் வட இந்தியப் பெண். எனக்கு சிறுவயது முதல் ஷாருக்கானையும், சல்மான் கானையும் வெகுவாகப் பிடிக்கும் எனத் தெரி வித்தார்.

விழாவில் இளம்திரைப்பட நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு பேசியதாவது : எல்லோரும் என்னை மாறவே இல்லை, அப்படியே இருக்கிறேன் என்கிறார்கள். ரசிகர்கள் மாறவில்லை, நான் ஏன் மாறவேண்டும். நான் துணிச்சலாக பேசுகி றேன் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட மிகப் பெரிய ஜனநாயகநாடு இந்தியா. ஜனநாயக நாட்டில் நடிகனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. நான் கல்லூரியில் பிகாம் தான்படித்தேன். இன்ஜினி யரிங் 4 வருடம் பிகாம் 3 வருடம். அதனால்தான் அந் தப் படிப்பை தேர்வு செய்தேன். சினிமாவில் படித்த வர்களே இல்லை என்று அபாண்டமாக கூறுகிறார்கள். நல்ல படித்தவர்கள் அதிகம் உள்ளனர். கல்லூரி கல்லூரி மாணவர்களும் படித்து முடித்துவிட்டு சினி மாத் துறைக்கு வரவேண் டும். கல்லூரி காலத்தில் அமையும் நண்பர்கள் தான் சாகும் வரைக்கும் நம்மோடு துணையாக இருப்பார்கள். அனைவரிடமும் நட் போடு பழகுங்கள் என்றார்.நிகழ்ச்சியில் டக்கர் படநாயகி திவ்யன் ஷா கௌஷிக், இசை அமைப்பாளர் ராம் பார்த்த சாரதி, இயக்குனர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். டக்கர் படத்தின் பாடலை முதன்முதலாக சித்தார்த்பாடி, ஆடினார். விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

குருகுல கல்வி, இந்தி வலியுறுத்தல் ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான எஸ்எஸ்என்யு சார்பில் நடந்த இந்த மாநாட்டில் பேசிய பெரும்பாலோனர் குருகுலக் கல்வியை வலியுறுத்தியும், தூக்கிப்பிடித்தும் பேசினர். குறிப்பாக தாய்மொழி கல்வியை ஆதரித்தாலும், இந்தி கற்பதால் எந்த தவறும் இல்லை என்பதை வலியுறுத்தினர். கன்வீனர் வினோத் பேசும்போது, தமிழக கல்வித்துறையில் ஊழல் மலிந்து, தரம் குறைந்து காணப்படுவதாக குற்றம்சாட்டினார்.

2வது நாளான இன்று நட்சத்திரக் கலைவிழா வின் 2ம் நாளான (20ம் தேதி) வியாழக்கிழமை, திரைப்பட பின்னணி பாடகிகள் சுசித்ரா சரண்யா நிவாஸ், பின்னணி பாட கர் ரஞ்சித், கானா பாடகர் கானாபாலா குழுவினர் பங்கேற்கும் ஆர்கெஸ்ட்ரா நடக்கிறது.

Related Stories: