திருத்தணியில் ஓடும் பஸ்சில் வலிப்பு நோயால் கண்டக்டர் அவதி

திருத்தணி, பிப். 20: திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வரை அரசு பஸ் தடம் எண் 97 இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் ஓட்டுநராக மாரிமுத்து மற்றும் நடத்துனராக அரக்கோணத்தை சேர்ந்த அன்புநாதன் (45) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் திருத்தணியில் இருந்து திருவள்ளூருக்கு தடம் எண் 97 புறப்பட்டது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ - மாணவிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்தனர். இதையடுத்து, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக திடீரென நடத்துனர் அன்பு நாதனுக்கு வலிப்பு நோய் வந்தது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாணவ - மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே ஓட்டுநர் மாரிமுத்து பேருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக அன்புதாசனை திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருத்தணி போக்குவரத்து நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து மீண்டும் மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்களையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாணவ - மாணவிகள் கல்லூரிக்கு 10 மணிக்கு சென்றனர்.

பஸ் கண்ெடக்டருக்கு வலிப்பு ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: