வந்தலை கிராமத்தில் சிறு பாலங்களுடன் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

லால்குடி, பிப்.18: லால்குடியை அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் வந்தலை கூடலூர் ஊராட்சியில் வந்தலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேரோடும் வீதியில் உள்ள மண்சாலை மழை காலங்களில் மிகவும் சேரும் சகதியுமாக இருப்பதால் ஆலய சப்பரங்கள், தேர் ஆகியவை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. எனவே இப்பகுதி கிராம மக்கள் லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியனை சந்தித்து தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கியது. 2 இடங்களில் தலா ரூ.1 லட்சம் என 2 சிறுபாலங்களுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் துவக்கி வைத்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஊராட்சி தலைவர் முருகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கோல்டன் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், பிரதிநிதிகள் சுகுமார், ராமச்சந்திரன், சிங்கராயர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>