ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சகிப்பு தன்மை குறித்த குடும்ப விழா

தா.பழூர், பிப். 18: ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்பு தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரகலா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குடும்ப ஒற்றுமை, சகிப்பு தன்மை, கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை, பெற்றோர்களை அனுசரித்து செல்வது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

சுகாதாரத்துறை மூலம் செயல்படும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி மீனாட்சி மற்றும் முதன்மை ஆலோசகர் கங்கா ஆகியோர் பங்கேற்று ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நோக்கம், பணிகள், மகளிருக்கான உதவி தொலைபேசி எண் “181” குறித்து எடுத்துக் கூறினர். குடும்ப விழாவில் குடும்ப பிரச்னை காரணமாக புகார் அளிக்க வந்த புகார்தாரர்களும், ஏற்கனவே புகார் அளித்து கணவன் மனைவி சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக குடும்பத்துடன் இணைந்துள்ள கணவன், மனைவி, பொதுமக்கள் பங்கேற்றனர். அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா நன்றி கூறினார்.

Related Stories: