பள்ளி ஆண்டு விழா

கீழக்கரை, பிப்.17: கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியின் 87வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார். சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு கூட்டு உடற்பயிற்சி யோகாசனம், பிரமிடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. டாக்டர் அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேசனின் சிறந்த ஆசிரியருக்கான விருது தலைமை ஆசிரியை ஹமீது நிஷாவிற்கு வழங்கப்பட்டது.

இதில் திருப்புல்லாணி வட்டாரக் கல்வி அலுவலர் தங்க கனிமொழி, அன்வர் ஜஹான், செயலாளர் என்ஜினீயர் சுல்தான் சம்சுல் கபீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வி ஒழுக்கம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் தவமணி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: