சமயநல்லூரில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்

வாடிப்பட்டி, பிப். 17: சமயநல்லூர் துணை கண்கானிப்பாளர் அலுவலகம் சார்பில் சமயநல்லூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில் 102 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது மதுரை மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் ஆலோசனையின் பேரில் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. இம்முகாம் சமயநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமயநல்லூர் டி.எஸ்.பி ஆரோக்கிய ஆனந்த்ராஜ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் முன்னிலை வகித்தார்.

Advertising
Advertising

வாடிப்பட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பம் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி, அலங்காநல்லூர் நிதிக்குமார், நாகமலை புதுக்கோட்டை முத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று அந்தந்த காவல்நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அவ்வாறு 102மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வுகாணப்பட்டது. முடிவில் சமயநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: