உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம், பிப். 17:உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நீர்நிலைகல் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் நீலமலைகோட்டை கிராமம்  உட்பகுதியில் நல்லிகவுண்டன் ஓடையின் கிளை ஓடையான உப்போடையில் கடந்த ஆண்டு முந்தைய ஆட்சியர் அவர்களால் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின்படி நீர் வழித்தடங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலை பகுதிகள் மீட்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீட்கப்பட்ட ஓடைகளை அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் சிலர் ஓடையை சேதப்படுத்தி, விவசாய நிலமாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்தனர்.

இவர்கள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தொடர்ந்தது. இதையடுத்து   விஜயலட்சுமி உத்தரவின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ஓடையில் அமைந்துள்ள,  ஆழ்துளை கிணறு ஒன்றை ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக மின் இணைப்பை ஏற்படுத்தி அந்த ஆள்துளை கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதேபோல் ஆக்கிரமிப்பு செய்த மற்றவர்களும் இந்த முயற்சியில் ஈடுபடுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து சேதப்படுத்திய வழக்கில் பழனிச்சாமி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இவர் மீண்டும் அதே ஆக்கிரமிப்பை செய்துள்ளார். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நீர்நிலை ஓடைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர். தற்போது ஊராட்சி செயலர் ஒத்துழைப்போடு ஆழ்துளை கிணற்றிலிருந்து சட்டவிரோதமாக மின் இணைப்பு ஏற்படுத்தி, இரவு நேரங்களில் நீரை எடுத்து தனது சொந்த நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றார்.

Related Stories: