திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள்

 

திண்டுக்கல், ஏப்.24:திண்டுக்கல் நத்தம் ரோட்டில் குடகனாறு இல்லம் அருகே ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோடு வழியாக கோபால்பட்டி, நத்தம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல முக்கியமான வழித்தடம் ஆகும். இந்த ரோடு வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் குடனாறு இல்லம் அருகே மேம்பாலம் உள்ளது. இதில் ராஜலட்சுமி நகர் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல சர்வீஸ் ரோடும் உள்ளது. இதன் அருகே தினந்தோறும் மாலை நேரங்களில் சரக்கு வாகனங்களில் வைத்து பழங்கள், காய்கறிகள், தக்காளி போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் மாலை நேரங்களில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் ரோட்டோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: